Pages

Wednesday 1 August 2012

அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள்

1/

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அபூ யஹ்யா

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறி…வித்தார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள்.

(இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?’ என்று கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள் குறிப்பிட்ட) அதை நான் அதில் காணவில்லையே!’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலம் இருங்கள்’ (எனும் 59:7 வது வசனமே அது) என்று பதிலளித்தார்கள். (புஹாரி ஹதீஸ்)
Volume :6 Book :77 No:5939

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி ஹதீஸ்) Volume :7 Book :96 No:7288

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.(அல்-குர்ஆன்.59:7 )

No comments:

Post a Comment